செல்போன் டார்ச்சில் டிக்கெட் கொடுத்த நடத்துனர்

X
குமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தினமும் மாவட்டத்தில் எங்காவது ஒரு அரசு பேருந்து பழுதாகி நிற்பதும் அதை பயணிகள் தள்ளி செல்லும் சம்பவங்களும் வழக்கமான சம்பவங்கள் போல அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் நேற்று இரவு கொல்லங்கோடு - மார்தாண்டம் அரசு பேருந்தில் உள்ள மின் விளக்குகள் திடீரென எரியவில்லை. இதனால் முழுமையான இருளில் பேருந்து நிறைய பயணிகள் மத்தியில் தத்தளித்த நடத்துனர் தனது செல்போன் டார்ச் சை சட்டை பையில் வைத்து அந்த வெளிச்சத்தில் டிக்கெட் கொடுக்கும் பரிதாப சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த காட்சிகளை பயணிகள் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் வைரலாகி வருகின்றன. இது போன்ற தொடரும் சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி இயக்கப்படும் பேருந்துகளுக்கு எடுத்துகாட்டுகளாக அமைந்துள்ளது.
Next Story

