சங்கரன்கோவில் அருகில் பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி

சங்கரன்கோவில் அருகில் பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
X
பள்ளி மாணவன் கிணற்றில் மூழ்கி பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூர் கிராமத்தில் தற்பொழுது கோடைகால விடுமுறை பள்ளியில் விடப்பட்டதால் நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிணற்றில் குளிக்கும் பொழுது எதிர்பாராத விதமாக குரு பிரசாத் என்ற சிறுவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் மூழ்கிய மாணவன் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story