கோவை: முதியவர் மீது கொடூரத் தாக்குதல் - சிசிடிவி வெளியீடு !

கோவை: முதியவர் மீது கொடூரத் தாக்குதல் - சிசிடிவி வெளியீடு !
X
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இரண்டு இளைஞர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளன. காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் முன்பாக, சுமார் 65 வயது முதியவர் ஒருவரை இரண்டு இளைஞர்கள் கடுமையாகத் தாக்கினர். பொதுமக்கள் தடுக்க முயன்றும், இளைஞர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட கற்களாலும் கை கால்களாலும் முதியவரைத் தொடர்ந்து தாக்கினர். இதைப் பார்த்த அப்பகுதியினர் துணிச்சலுடன் செயல்பட்டு, அந்த இரண்டு இளைஞர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தாக்கப்பட்ட முதியவர் அப்பகுதியில் பாதுகாப்பாக அமர வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மதுபோதையில் முதியவரைத் தாக்கிய நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த அருவங்காடு பகுதியைச் சேர்ந்த திவாகரன் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மற்றும் இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story