வேப்பனப்பள்ளி: தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலம்

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது கட்டாயமேடு கிராமத்தில் பழைய பாலத்தை அகற்றி புதிய பாலத்தை அமைக்க நபார்டு திட்டத் தின் கீழ் ரூ.3 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மார்கண்டேயன் கிளை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. ஆபத்தான முறையில் தண்ணீரில் இறங்கி ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

