கோவை: இரண்டாம் நிலை காவலர்களுக்கு சிறப்பு ஆயுதப் பயிற்சி

கோவை காவல் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான ஆயுதப் பயிற்சி மற்றும் தற்காப்பு நுட்பப் பயிற்சி உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன.
கோவை காவல் பயிற்சிப் பள்ளியில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான ஆயுதப் பயிற்சி மற்றும் தற்காப்பு நுட்பப் பயிற்சி உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் இரண்டு நாட்கள் நடைபெற்றன. 183 இரண்டாம் நிலை காவலர்கள் இந்த உயர்நிலை பயிற்சிகளைப் பெற்றனர். கடந்த 04.12.2024 அன்று தொடங்கிய 7 மாத கால அடிப்படைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, மே 19 மற்றும் 20, 2025 ஆகிய தேதிகளில் சிறப்பு இலக்குப்படைப் பிரிவு (STF) பயிற்சியாளர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் காவலர்களுக்கு ஆயுதப் பயிற்சி, தற்காப்பு நுட்பங்கள், உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி போன்ற உயர் ரீதியிலான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இது காவலர்களுக்கு களத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும், தங்கள் பணிகளை திறம்பட செய்யவும் உதவும் என காவல் பயிற்சிப் பள்ளி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story