ஆவுடையானூரில் சாலையோர குப்பைகளால் சுகாதாரக் கேடு

X
தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி சாலடியூரில் இருந்து சின்ன நாடானூர் செல்லும் சாலை ஓரத்தில் மக்கள் அதிக அளவில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உருவாகி உள்ளது. எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக குப்பைகளை கொட்ட குப்பை தொட்டி வைக்க வேண்டும். மேலும் உடனுக்குடன் குப்பைகளை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
Next Story

