ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் நூதன முறையில் பயனாளி மனு கொடுத்ததால் பரபரப்பு.

ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் நூதன முறையில் பயனாளி மனு கொடுத்ததால் பரபரப்பு.
X
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அக்ராபாளையம் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களிடையே மனுக்களை பெறப்பட்டதில் பயனாளி ஒருவர் வாயில் துணியைக்கட்டிக்கொண்டு, வெற்றிலை பாக்கு, பழத்துடன் கோரிக்கை மனு கொடுத்தார்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அக்ராபாளையம் உள்வட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களிடையே மனுக்களை பெறப்பட்டதில் பயனாளி ஒருவர் வாயில் துணியைக்கட்டிக்கொண்டு, வெற்றிலை பாக்கு, பழத்துடன் கோரிக்கை மனு கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் அக்ராபாளையம் உள்வட்டத்தைச் சேர்ந்த சிறுமூர், பூசிமலைக்குப்பம், 12புத்தூர், மொரப்பந்தாங்கல், வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், அரியபப்பாடி, சேவூர், அடையபலம், மெய்யூர், முள்ளண்டிரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆரணி வட்டாட்சியர் கௌரி, வருவாய் ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு கோரிக்கை மனுவில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் உள்ளே சென்று கோரிக்கை மனுவினை கொடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து இப்பயனாளி நான் என்னுடைய வீட்டுமனை பட்டா குறித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் வாயில் துணியைக்கட்டிக்கொண்டு மனு கொடுக்க வந்தேன் என்று கூறினார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிட்டார். மேலும் ஆரணி அடுத்த அடையபலம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவர் கொடுத்த மனுவில் அடையபலம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை தனியார் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துகொண்டு வேலி அமைத்து உரிமை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து நிலத்தை அளந்து அரசு இடத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தார். இதுபோல் அக்ராபாளையம் உள்வட்டத்தைச்சேர்ந்த பலர் மனு கொடுத்தனர். மேலும் இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் புருஷோத், ஜெயச்சந்திரன், தமிழரசன், ரமேஷ்பாபு, பாஸ்கர், இரவி, முனிவேல்,கவிதா, ஷாலினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
Next Story