குண்டடா ஒன்றிய கழகம் சார்பில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

குண்டடா ஒன்றிய கழகம் சார்பில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
X
குண்டடம் மேற்கு ஒன்றியம் கழகம் சார்பாக அதிமுக திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளரும் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி. மகேந்திரன் தலைமையில் பூத் கமிட்டி சரிபார்த்தல் மற்றும் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், குண்டடம் மேற்கு ஒன்றியம், நந்தவனம்பாளையம், சடையபாளையம், முத்தியம்பட்டி, பெரிய குமாரபாளையம், நவனாரி பெல்லம்பட்டி, மருதூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 24 பாகங்களை, அஇஅதிமுக திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் பூத் கமிட்டி பணிகளை சரிபார்த்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். உடன் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் பி.கே. குண்டடம்,மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், குண்டடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சோமசுந்தரம், ருத்ராவதி பேரூர் செயலாளர் தமிழரசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர்.
Next Story