உயிரிழந்த குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய எம்எல்ஏ

மதுரை அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தினரை இன்று (மே.21) நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அஇஅதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா நிவாரண உதவி வழங்கினார். உடன் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story