ராமநாதபுரம் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அருகேயுள்ள பேரையூர் பூவைசிய இந்திரகுல வேளாளர் சங்க நூற்றறாண்டு விழாவை முன்னிட்டு, சமூக ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை முதுகுளத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சண்முகம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சதன் பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் 500}க்கும் மேற்பட்டோர் கலந்து பங்கேற்றனர். போட்டிக்கா 6.5 கி.மீ. தொலைவு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.6 ஆயிரம், மூன்றறாம் பரிசாக ரூ.4 ஆயிரம், சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் பரமக்குடியை சேர்ந்த மைக்கேல்பெல்சியா முதலிடமும், ஆண்கள் பிரிவில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமர் ஆகியோர் முதலிடம் பெற்றறனர். மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் பேரையூர் காவல் உதவி ஆய்வாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பூ வைசிய இந்திர குல வேளாளர் சங்கம், மாணவர் மன்றத்தினர் செய்தனர்.
Next Story

