ராமநாதபுரம் வைகாசி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்

ராமநாதபுரம் வைகாசி திருவிழா முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கினர்
X
கமுதி அருகே ஸ்ரீகுங்கும காளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள வடுகபட்டி கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீகுங்கும காளியம்மன், ஸ்ரீ நாககன்னி அம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் சுவாமிகளுக்கும், காவல் தெய்வம் ஸ்ரீ கருப்பணசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று பொதுமக்கள் பால்குடம் எடுத்தும், கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அக்னி சட்டி எடுத்தல், வேல் குத்துதல், பூ பெட்டி, சேர்த்தாண்டி வேடம் அணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். இரவு திருவிளக்கு பூஜை மற்றும் 22 ஆம் தேதி மாலை முளைப்பாரி கரைத்தில், 23ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் வடுகபட்டி, மூலக்கரைப்பட்டி, அம்மன்பட்டி, மண்டலமாணிக்கம், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை வடுகபட்டி கிராம பொதுமக்கள் இளைஞர்கள் செய்தனர்.
Next Story