ராமநாதபுரம் முன்னாள் பாரத பிரதமர் நினைவு நாள் அனுசரிப்பு

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி 34 ஆம் ஆண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி மற்றும் அவரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தபட்டது
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 34 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இதனை தொடர்ந்து இந்த நாளை கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் என உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது அதன் பின்பு ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர் இதில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் என்ற கோபால் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாநில செயலாளர் ஆனந்தகுமார், முன்னாள் கவுன்சிலர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் மௌன அஞ்சலி,மலர் தூவி அஞ்சலி செலுத்தியும், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றும் அனுசரிக்கப்பட்டது. இதில் வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், முன்னாள் ராணுவ அணி தலைவர் கோபால், நாகராஜன், கவுன்சிலர்,ரேவதி மணிகண்டன், ஜெயக்குமார், அழகு, ராகுல் ஶ்ரீகாந்த், வலம்புரி முனியசாமி மேகநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்
Next Story