கோவை: தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

X
கோவை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2025-ம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலம் 19-ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். ஆண்கள் 14-40 வயதுக்குள் இருக்க வேண்டும்; பெண்களுக்கு வயது வரம்பில்லை. இங்கு எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக், பிட்டர் உள்ளிட்ட 2 ஆண்டு கோழ்சுகள், உணவு தயாரித்தல், இன்டீரியர் டிசைன் போன்ற 1 ஆண்டு கோர்சுகள், டிரோன் பைலட், ஏர்கிராப்ட் போன்ற 6 மாத கோர்சுகளும் உள்ளன. பயிற்சியாளர்களுக்கு இலவசமாக புத்தகங்கள், சைக்கிள், சீருடை, பஸ் பயண அட்டை, ரூ.750 உதவித்தொகை வழங்கப்படும். கூடுதலாக, முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்யப்படும் என்று தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் யா.லீமாரோஸ் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story

