வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் சுகாதார சீர்கேட்டால் அவலநிலை

வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் சுகாதார சீர்கேட்டால் அவலநிலை
திருப்பத்தூர் மாவட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் சுகாதார சீர்கேட்டால் அவலநிலை திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் பகுதியில் வேளாண்மை இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது இந்த வேளாண்மை அலுவலகத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட குக் கிராமங்களில் இருந்து சிறு குரு விவசாயிகள் விதை வாங்குவதற்கும் மற்றும் அலுவலகப் பணிகளுக்கு தினந்தோறும் விவசாயிகள் வந்து செல்கின்றனர் இந்த அலுவலக கட்டிடம் சுற்றிலும்செடி கொடி முள் முதார்கள் குப்பைக் கழிவுகள் நிறைந்துள்ளது இந்த முட்புதார்களில் கொடிய விஷமுள்ள பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் சுற்றி வருகிறது அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு வழங்கக்கூடிய முருங்கைச் செடி. பப்பாளி செடி உள்ளிட்ட பலவகை செடிகள் விவசாயிகளுக்கு வழங்காமல் காய்ந்து போய் உள்ள அந்த பிளாஸ்டிக் கவர்களில் மழைநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி இந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளது இதைக் குறித்து துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
Next Story