ராமகிருஷ்ண புரத்தில் சரக்கு ஏற்றும் போது படியில் சறுக்கி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
ராமகிருஷ்ண புரத்தில் சரக்கு ஏற்றும் போது படியில் சறுக்கி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா தெற்கு சேங்கல் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் வயது 34. இவர் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ண புரத்தில் செயல்படும் தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மே 18ஆம் தேதி காலை 11 மணியளவில் லோடு ஏற்ற படியில் ஏறும்போது, கால் இடறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த செந்தில்குமாரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி மே 20 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த செந்தில்குமாரின் தாயார் செல்வம் வயது 63 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த செந்தில்குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவகிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்
Next Story




