சேலத்தில் பேரனை தர மறுத்ததால் மூதாட்டி மாயம்

சேலத்தில் பேரனை தர மறுத்ததால் மூதாட்டி மாயம்
X
போலீசார் விசாரணை
சேலம் வீராணம் அடுத்த அள்ளி குட்டை வெங்கடாஜலம் காலனியை சேர்ந்தவர் கோமதி இவரது மகன் மனோகர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது குழந்தை கௌரவ் என்ற இரண்டரை வயது குழந்தை உள்ளது. நேற்று மதியம் மூதாட்டி கோமதி குழந்தை கௌரவ்வை வைத்திருந்தார். அப்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. இதனை அடுத்து வீட்டில் இருந்த மனோகர் குழந்தை எடுத்துச் சென்றார். சற்று நேரம் கழித்து மீண்டும் குழந்தையை தன்னிடம் தடுமாறு கோமதி கேட்டுள்ளார். ஆனால் மனோகர் குழந்தையை தர மறுத்தார். இதனால் கோமதி கோபித்து கொண்டு யாரிடமும் கூறாமல் வீட்டிலிருந்து வெளியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கோமதி கிடைக்கவில்லை. இது குறித்து வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story