அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

X
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்வு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் அறநிலையத்துறை சார்பில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை கொடுக்கப்பட்டதை தொடர்ந்து வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசிக்கு மரியாதை கொடுக்கப்பட்டது இதனிடையே வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, தனக்கு அறநிலையத்துறை சார்பில் வழக்கம்போல் கொடுக்கப்பட்டு வந்த முதல் மரியாதை இந்த முறை கொடுக்கவில்லை என புகார் தெரிவித்து விளக்கம் கேட்கச் சென்ற தன்னை வீரபாண்டி செயல் அலுவலர்கள் அவதூறாக பேசியதாக தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி புகார் அளித்திருந்தார் இந்தப் புகாரின் அடிப்படையில் வீரபாண்டி கோயில் அறநிலையத்துறையின் உதவி ஆணையர் ஜெய தேவி, வீரபாண்டி செயல் அலுவலர் நாராயணி, உள்ளிட்ட ஐந்து பேர் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் முன்னதாக வீரபாண்டி செயல் அலுவலர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை தாக்கியதாக வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா அவரின் கணவர் சசி மற்றும் ஆதரவாளர்கள் மீது அறநிலையத்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது அந்தப் புகாரின் பேரில் கீதா சசி, அவரது கணவர் சசி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வீரபாண்டி போலீசார் அரசு பணியாளர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்
Next Story

