சேலம் ஜமாபந்தியில் மனு கொடுத்தவர்களுக்கு சான்றிதழ்

சேலம் ஜமாபந்தியில் மனு கொடுத்தவர்களுக்கு சான்றிதழ்
X
மாவட்ட வருவாய் அதிகாரி வழங்கினார்
சேலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 14-ந்தேதி ஜமாபந்தி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. 7 நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து 473 மனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாளான நேற்று மனு கொடுத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரவிக்குமார் தலைமை தாங்கி 3 பேருக்கு பட்டா, 4 பேருக்கு புதிய ரேஷன் கார்டு, 5 பேருக்கு பட்டா மாறுதல் 3 பேருக்கு தனிபட்டா ஆகியவற்றை வழங்கினார்.
Next Story