கண்டமனூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

X
கண்டமனூர் அருகே ஆத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி அவரது தந்தை வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று (மே.20) ஜெகதீஸ்வரியை பார்க்க சென்ற அசோக்குமார் அவரை தன்னுடன் வீட்டிற்கு வர வற்புறுத்தி கத்தியால் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரில் கண்டமனூர் போலீசார் அசோக்குமாரை கைது செய்தனர்.
Next Story

