கரூர் கிழக்கு மாவட்ட விசிக கட்சி அலுவலகத்தில் ஒன்றிய செயலாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிறந்த நாளில் மாவட்ட செயலாளர் வாழ்த்து நமது
கரூர் கிழக்கு மாவட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி (எ) வன்னியரசு பிறந்த நாளை முன்னிட்டு குளித்தலையில் உள்ள கரூர் கிழக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் விசிக கேக் வெட்டி கொண்டாடினர். தனது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி அலுவலகத்திற்கு ரூ.500 நன்கொடையை கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேலிடம் வழங்கினார். இந்நிகழ்வில் முசிறி ஒன்றிய பொறுப்பாளர் நெய்வேலி சூர்யா, ராப்பம்பட்டி பிரவீன், குளித்தலை ஒன்றிய துணை செயலாளர் மகாலிங்கம், நங்கவரம் பழனிவேல், தோகைமலை இளைஞர் அணி அமைப்பாளர் சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story