ராயனூர்- மது போதையால் வந்த வினை.கல்லீரல் செயல் இழந்ததால் உயிரிழப்பு.
ராயனூர்- மது போதையால் வந்த வினை.கல்லீரல் செயல் இழந்ததால் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், திருமாநிலையூர் முதல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கோபிநாத் வயது 46. இவருக்கு கடந்த 10 வருடங்களாக காச நோய் இருந்து வந்தது. இதனிடையே மது போதைக்கும் அடிமையாகி வந்தார். இதனால் அவரது கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த மே 11-ம் தேதி இரவு 8 மணி அளவில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த கோபிநாத் சிகிச்சை பலனின்றி மே 20 ஆம் தேதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது சகோதரர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த கோபிநாத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story






