விழுப்புரம் மாவட்டத்தில் பயிர்கள் சேதம் தொடர் மழையால் விவசாயிகள் வேதனை

X
விழுப்புரம்மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மேல்மலையனுார், திண்டிவனம், விக்கிரவாண்டி ஆகிய தாலுகாக்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் இரண்டாம் கட்ட நெல் சாகுபடி செய்துள்ளனர்.இதன் அறுவடை சில நாட்களாக நடந்து வந்தது.இதுவரை 50 சதவீத பயிர்கள் கூட அறுவடை முடியாத நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அறுவடை இயந்திரங்களை கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. நீரில் மூழ்கிய நெற்கதிர்கள் சேதமாகி வருவதால் மகசூல் பாதியாக குறைவதுடன், நெல்லின் தரமும் குறைந்து விடும்.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்,பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

