செங்கமேடு பகுதியில் பொது இடத்தில் பட்டா வழங்க எதிர்ப்பு

X
செங்கமேடு கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சொந்தமான பொது இடத்தை வெளி நபர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து ஊராட்சி தலைவர் கலியபெருமாள் தலைமையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு:செங்கமேடு கிராமத்தில், அரசு தொடக்க பள்ளி கட்டடம் குடியிருப்பு பகுதியில் சிறிய இடத்தில் உள்ளது. பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கு போதிய இடமில்லை.இந்நிலையில், கடந்த 14ம் தேதி விக்கிரவாண்டி தாலுகா அலுவலர்கள், பள்ளிக்கூடம் எதிரே உள்ள சிறிய பொது காலி இடத்தில், வெளியூரைச் சேர்ந்த சிலருக்கு இலவச பட்டா வழங்க இடம் தேர்வு செய்து சென்றனர்.
Next Story

