வீடு புகுந்து பணம் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது

X
காங்கேயம் அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 25). இவரது வீட்டில் இருந்து ஹோம் தியேட்டர் மற்றும் ரூ.6 ஆயிரம் திருட்டு போனது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்துடன் கல்லூரியில் ஒன்றாக படித்த பல்லடத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (23) மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த அன்புமணி (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கைதானவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய திருப்பூர் நெருப்பெரிச்சலை சேர்ந்த மணிகண்டன் (29) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story

