துரிதமாக செயல்பட்ட பயிற்சி காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்

துரிதமாக செயல்பட்ட பயிற்சி காவலர்களை பாராட்டிய காவல் ஆணையர்
X
மதுரை சித்திரை திருவிழாவின் போது துரிதமாக செயல்பட்ட பயிற்சி காவலர்களை காவல் ஆணையர் பாராட்டினார்.
மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி, கடந்த 11.5.2025 அன்று பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டிருந்த இடையர்பட்டி காவலர் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த பயிற்சி காவலர்களான சரண்ராஜ், சிந்தனைவளவன், சைமன் மற்றும் சந்திர பிரகாஷ் ஆகியோர் தங்களது பணியின் போது தல்லாகுளம் பெருமாள் கோவிலின் அருகில் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மின்சாரம் தாக்கி உயிருக்காக துடித்துக் கொண்டிருந்தபோது, துரிதமாக செயல்பட்டு அச்சிறுவனுக்கு முதலுதவி அளித்து உயிரை காப்பாற்றி உள்ளனர். இவர்களது இந்த வீரதீர செயலினை பாராட்டும் விதமாக, நேற்று (21.05.2025) மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்கள்.
Next Story