கோவை: ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி-தேசியக்கொடி பேரணி !
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக, நேற்று கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் நடத்திய மூவர்ணக்கொடி பேரணியில், பா.ஜ.க.வின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பேசிய வானதி சீனிவாசன், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பயங்கரவாதத் தாக்குதல்களை சந்தித்ததில்லை என்று குறிப்பிட்டார். இந்தியா வல்லரசாகி வரும் வேளையில், அண்டை நாடுகள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் இந்தியா தொடர்ச்சியாக தாக்குதல்களை சந்தித்து வருவதாக அவர் கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் - துல்லியமான திட்டமிடல் மற்றும் இஸ்லாமியப் பெண் அதிகாரியின் பங்கு நம் ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல், தமிழகத்தில் நடந்த மதத் தாக்குதல்கள் என எதற்கும் இடம் கொடுக்காமல், பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் பாதுகாப்பு அளித்து நாட்டைக் காத்து வரும் பிரதமர் மோடி, பஹல்காமில் நடந்த சம்பவத்தை மிகச் சரியாகக் கணித்து, துல்லியமாகத் திட்டமிட்டு பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக வானதி சீனிவாசன் கூறினார்.
Next Story




