நிலத்தை மீட்டுத்தர கூலித் தொழிலாளர்கள் கோரிக்கை

X
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி கிராமத்தில், 1990 ஆம் ஆண்டு 300க்கும் மேற்பட்டோர் டைமண்ட் சிட்டி என்ற பெயரில் வைரத் தேவரின் மகன் வேலுச்சாமி என்பவரிடம், ஒவ்வொருவரும் தலா 5.5 செண்டு வீதம் மொத்தம் 300 பேருக்கும் மேற்பட்டோர் பணத்திற்கு நிலத்தை வாங்கிய நிலையில் , வேலுச்சாமி தனது தந்தையான வைரத் தேவர் இறப்பு சான்றிதழ் -ஐ போலியாக தயாரித்து, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் போலிச் சான்றிதழ் பெற்று நிலத்தை மோசடி செய்துள்ளனர். அப்பாவி கூலித் தொழிலாளிகள் வாங்கி சேகரித்த நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை காவல்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டோர் முறையிட்டும் , இதுவரை நீதி கிடைக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், நிலத்தை பறிகொடுத்து பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளர்கள் தங்களது நிலத்தில் இறங்கி போராட்டத்தில் நேற்று (மே.21) ஈடுபட்டனர்.தங்களின் எதிர்காலத்தை எண்ணி நிலத்தை மீட்டு தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

