தென்காசியில் சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு பாராட்டு

தென்காசியில் சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு பாராட்டு
X
சுகாதாரத் துறை இணை இயக்குநருக்கு பாராட்டு
தென்காசியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பி.பிரேமலதாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த 18 மாதங்களில் மாநில அளவிலும், தேசிய அளவிலும் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூா் அரசு மருத்துவமனைகளுக்கு பல விருதுகள் கிடைக்க காரணமாக இருந்ததற்காக, இந்திய மருத்துவக் கழகம் குற்றாலம் கிளை சாா்பில் இந்தப் பாராட்டு விழா நடைபெற்றது. குற்றாலம் கிளையின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். இந்திய மருத்துவ கழக மாநில நிா்வாகி மருத்துவா் அப்துல் அஸீஸ் ,மூத்த கண் மருத்துவா் பாலாசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இணை இயக்குநா் பி.பிரேமலதாவிற்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா். தென்காசி மாவட்டத்தை சோ்ந்த 100 க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்து கொண்டனா். குற்றாலம் கிளைச் செயலா் ஸ்ரீமணிகண்டன் நன்றி கூறினாா்.
Next Story