தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

X
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் கூட்டம் காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலபொருளாளர் எஸ்.நடராஜன் தலைமையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் ராஜா சான்றிதழ் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். திருப்பூர் புறநகர் மாவட்ட தேர்தலில் போட்டியிட்டு உடுமலை தலைவர் ஆர்.பூபதி, பல்லடம் செயலாளர் ஆர்.கணேசன், ஊத்துக்குளி பொருளாளர் பி.எஸ். உத்தரமூர்த்தி, வெள்ளக்கோவில் அமைப்புச் செயலாளர் ஜே.கே. செல்வகுமார், காங்கேயம் கொள்கை பரப்புச்செயலாளர் கபிலதாசன், திருமுருகன் பூண்டி, மங்கலம் துணை தலைவர்கள் முத்து மற்றும் எஸ். மதிவாணன், தண்ணீர் / பந்தல், காங்கேயம் மற்றும் உடுமலை துணைச் செயலாளர்கள் லோகநாதன், சண்முக வேல், ராமசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Next Story

