கோவை: ஜெண்டர் ஆடிட்டுக்கு தனியாக அமைப்பு உள்ளது- வானதி

X
ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்று திரும்பிய சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர், சமீபத்திய ஆஸ்திரேலிய பயண அனுபவங்கள், இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளின் மேம்பாடு மற்றும் தமிழக அரசின் நிதி ஆயோக் பங்கேற்பு குறித்து பகிர்ந்து கொண்டனர். ஆஸ்திரேலியாவில் இந்தியா பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பிறகு இங்கு நடந்ததை எடுத்துக் கூறினோம். அங்கு இருக்கக்கூடிய பெண்கள் தலைமைத்துவம் மற்றும் அரசாங்கத்தில் அவர்களின் பங்கு குறித்து கேட்டறிந்தோம். இந்தியப் பெண்களுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அங்குள்ள முக்கிய அதிகாரிகளுடன் விவாதித்தோம். அவர்களின் கலாச்சாரச் சின்னங்களைப் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நாட்டுச் சட்டத்தின்படி அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற விதி எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை அறிந்து கொண்டோம். ஒவ்வொரு அமைச்சகமும் பாலின தணிக்கை (Gender Audit) வைத்திருப்பதாகவும், குடும்ப வன்முறை மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்காக தனித்தனியாக ஒரு அமைப்பு இருப்பதும் போன்ற புதிய விஷயங்களை அறிந்து கொள்ள இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது என்று கூறினார்.
Next Story

