தமிழ்நாடு முதுகலை பட்டாதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுவில் அதன் மாநிலத்தலைவர் பிரபாகரன் பேட்டி*

X
தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதுகலை ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளது;இச்செயலால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஆசிரியர் நலனும் மாணவர்கள் நலனும் பாதிக்கப்படுகிறது;ஆசிரியர்களை ஆட்சியர்கள் ஒருமையில் திட்டுவதால் பள்ளிக்கல்வித் துறையில் உகந்த சூழலை உருவாக்காது-தமிழ்நாடு முதுகலை பட்டாதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுவில் அதன் மாநிலத்தலைவர் பிரபாகரன் பேட்டி விருதுநகர் தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதுகலை பட்டாதாரி ஆசிரியர் கழக பொதுக்குழுக்கூட்டம் அக்கழகத்தின் மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலையில் மாநிலத்தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் பிரபாகரன் ,திமுக அரசு தேர்தல் வாக்கிறுதியில் குறிப்பிட்டதை போல்,தன்பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜீன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் தலைமையாசிரியர் இல்லாமல் எந்த பள்ளியும் திறக்கக்கூடாது அதற்கு உரிய நடவடிக்கையாக மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்றும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் +1 மற்றும் +2 மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் அதே போல் தேர்தலில் தோல்வியுற்ற மாணவர்கள் மறுதேர்வு எழுதும் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு மே மாத விடுப்பு இல்லாத சூழ்நிலை நிலவுவதாகவும் அரசு முதுகலை ஆசிரியர்களை அலைக்கழிக்காமல் விடுமுறையை உறுதி செய்ய வேண்டும் எனவும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு எடுக்கும் முதுகலை ஆசிரியர்களின் பணிகளில் மாவட்ட ஆட்சியர்களின் தலையீடு அதிகமாக உள்ளதாகவும்,அதை தமிழ்நாடு முதுகலை பட்டாதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிப்பதாகவும்,இச்செயலால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதால் ஆசிரியர் நலனும் மாணவர்கள் நலனும் பாதிக்கப்படுவதாகவும்,பல மாவட்டங்களில் ஆட்சியர்கள் ஆசிரியர்களை ஒருமையில் திட்டுவதாகவும் இது பள்ளிக்கல்வித்துறையில் உகந்த சூழலை உருவாக்காது என்றும் தெரிவித்தார்.
Next Story

