ஆத்திபட்டியில் கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக ஊர் மக்கள் புகார். போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை

ஆத்திபட்டியில் கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக ஊர் மக்கள் புகார். போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை
X
ஆத்திபட்டியில் கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக ஊர் மக்கள் புகார். போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை
அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் கோவில் நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயற்சி நடப்பதாக ஊர் மக்கள் புகார். போராட்டம் நடத்த போவதாக எச்சரிக்கை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திப்பட்டி மந்தை ஊரணி அருகே நூற்றாண்டு புகழ்வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. முந்தைய காலத்தில் இங்கிருந்த அரண்மனைகாரர்கள் கோயில் கட்டியும், கோயில் கைங்கரியத்திற்கு 30 ஏக்கர் நிலத்தையும் கொடுத்துள்ளனர். இந்த நிலத்தில் உழவடை மட்டும் செய்வதுடன் நிலத்தை விற்க முடியாது. இந்த நிலம் காவல் மானியத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதில் 1985 ம் ஆண்டில் முறையான ஆவணங்கள் இன்றி 3 ஏக்கர் கோயில் நிலம் பல பேர்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தெரிந்த ஊர் மக்கள் கடந்த 2020ல், இந்த இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும் தனி நபர்களுக்கு பெயர் மாற்றத்திற்கு அனுமதிக்க கூடாது என விருதுநகர் மாவட்ட நகரமைப்பு பிரிவில்(DTCP) புகார் அளித்தனர். அந்த புகார் மனுவிற்கு பதிலாக விருதுநகர் மாவட்ட நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் இருந்து மக்களிடம் விளக்கம் பெறாமல் பெயர் மாற்றம் செய்யப்படாது என அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். இந்நிலையில் தற்போது ஊராட்சி நிர்வாகம் முடிந்தவுடன் சிறப்பு அதிகாரி காலத்தில் சம்பந்தப்பட்ட அந்த நிலத்திற்கு நகரமைப்பு பிரிவு உதவி இயக்குனர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் அனுமதி பெற்று வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முயன்றதை தெரிந்த மக்கள், கோயில் நிலத்தை தனி நபருக்கு பெயர் மாற்றம் செய்தால் போராட்டம் நடத்த போவதாக எச்சரித்துள்ளனர். இதுகுறித்து விருதுநகர் மாவட்ட நகரமைப்பு பிரிவு அலுவலர் ஹரியிடம் கேட்டபோது, காவல் மானிய நிலங்களை பட்டா மாற்றம் செய்து விட்டு மனைகளாக மாற்றலாமா என வருவாய்த்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி அடுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என கூறினார். இது குறித்து ஊர் மக்கள் அளித்த பேட்டியில், ஆத்திப்பட்டியில் காலம் காலமாக பெருமாள் கோயிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்களை தனியார் முறையான ஆவணங்கள் இன்றி பிளாட் போட முயற்சி செய்து வருகின்றனர்.‌ இது குறித்து ஊர் மக்கள் விருதுநகர் மாவட்ட நகர அமைப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தும் அதையும் மீறி பிளாட் போடும் பணி நடந்து வருகிறது. அரசு தலையிட்டு இதை நிறுத்த வேண்டும். இல்லையெனில், ஊர் மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். கோவில் நிலத்தை மீண்டும் கோவிலுக்கு ஒப்படைக்க வேண்டும் என கூறினர். பேட்டி: 1.முருகன் 2.பெரியசாமி
Next Story