காதலி வீட்டு முன்பு கேரளா காதலன் தற்கொலை

காதலி வீட்டு முன்பு கேரளா காதலன் தற்கொலை
X
மார்த்தாண்டம்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கேரளா மாநிலம் கொல்லத்தில் நர்சிங் படித்து வந்துள்ளார். அவருக்கு தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் அவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள ரப்பர் மரத்தில் 25 மதியத்தக்க வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.        மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திலிருந்து வாலிபர் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீஸ் விசாரணையில் தற்கொலை செய்தவர் கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த ஜெயின் மகன் ஜிதின் (25) என்பது தெரியவந்தது. கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மார்த்தாண்டம் இளம்பெண் நர்சிங் படித்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், பழக்கம் காதலாக மாறியுள்ளதாகவும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்து முறைப்படி ஜி தின் பெண் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.       இந்த நிலையில் மகளுக்கு அவசரமாக மற்றொரு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியதை  அறிந்த வாலிபர் நேற்று முன்தினம் காதலியின் வீட்டு அருகே வந்து இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஜிதின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதற்கு இடையில் ஜிதின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்த காதலி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரையும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story