எரியோடு அருகே கொலை

X
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, நாகையன்கோட்டை அருகே பண்ணப்பட்டி பகுதியில் பண்ணப்பட்டியை சேர்ந்த ராஜா மகன் மருதுபாண்டி(35) படுகொலை. சம்பவ இடத்தில் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குடும்ப பிரச்சினை காரணமாக கொலை நடைபெற்றதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. மருதுபாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினர் எரியோடு பண்ணப்பட்டியை சேர்ந்த முருகேசன் மகன் தனபால்(29) என்பவரை மாவட்ட எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் எரியோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

