புதையல் தேடும் விளையாட்டுப் போட்டி

புதையல் தேடும் விளையாட்டுப் போட்டி
X
சுற்றுலாத்துறை சார்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு புதையல் தேடும் விளையாட்டுப் போட்டி ஏரிச்சாலையில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோடை விடுமுறை முன்னிட்டு சுற்றுலாத்துறை சார்பாக கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் ஏரிச்சாலை பகுதியில் தினமும் மியூசிக் சேர், புதையல் தேடும் விளையாட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 9 மணியளவில் புதையல் தேடும் நிகழ்ச்சி எரிச்சாலையில் நடைபெற்றது. மறைவான மூன்று இடங்களில் Prince of hills என்ற sticker ஒட்டப்பட்டு அதனை சுற்றுலாப் பயணிகள் தேடி கண்டுபிடித்து எடுத்து முதலில் வருபவர்களுக்கு முதல் பரிசு, இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு எனக் கூறப்பட்ட நிலையில். சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் இதில் முதல் பரிசு ஜெனிபர் நிஷா அவர்களுக்கும் இரண்டாம் பரிசு அன்புச்செல்வன் திருச்சி மற்றும் மூன்றாம் பரிசு விஷால் மதுரை சுற்றுலாத்துறை சார்பாக வெற்றி பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு படகு இல்லம் மேலாளர் பரிசு கோப்பைகள் வழங்கினார்.
Next Story