வானூரில் புனரமைக்கப்பட்ட நூலக கட்டிடம் திறப்பு

X
வானுாரில் இயங்கி வந்த அரசு பொது நுாலகம் சேதமடைந்திருந்தது. இதையெடுத்து புதிதாக ஒரு நுாலக கட்டடமும், பழைய கட்டடம் புனரமைக்கப்பட்டது. புதிய மற்றும் புனரமைக்கப்பட்ட நுாலக கட்டட திறப்பு விழா நடந்தது.முதன்மை நுாலகர் சரஸ்வதி வரவேற்றார். ஒன்றிய சேர்மன் உஷா முரளி கட்டடத்தை திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தக கண்காட்சியை பார்வையிட்டார். வானுார் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, ஒன்றிய கவுன்சிலர் சசிக்குமார், முன்னாள் கவுன்சிலர் நெடுஞ்செழியன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில உறுப்பினர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர்.நுாலகத்தில் சுமார் 27 ஆயிரம் புத்தகங்கள் வாசகர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து வேலை நாட்களிலும், பொது நுாலகம் திறந்திருக்கும் என்றும், இதனை வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி முதன்மை நுாலகர் கேட்டுக் கொண்டார். நுாலகர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.
Next Story

