ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைப்பெற்ற கெங்கையம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பூங்கரக திருவிழா*..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெகுவிமர்சையாக நடைப்பெற்ற கெங்கையம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் பூங்கரக திருவிழா.. *கிரேன் இயந்திரம் மூலம் பறவைக்காவடி எடுத்து வழிப்பட்ட பக்தர்கள் திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கெங்கையம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா 3 நாட்கள் நடைப்பெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு வைகாசி மாதம் நடைப்பெற்ற திருவிழாவில், விண்ணமங்கலம் கிராம மக்கள் கெங்கையம்மனுக்கு கூழ் ஊற்றியும், மாவிளக்கு படைத்தும் அம்மனை வழிப்பட்டனர், மேலும் கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க இளைஞர்களின் உற்சாக நடனத்துடன் கெங்கையம்மன் திருவீதி உலா நடைப்பெற்றது, அதனை தொடர்ந்து கெங்கையம்மன் பூங்கரக வடிவில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது, இந்நிலையில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற கிரேன் இயந்திரம் மூலம் பறவைகாவடி எடுத்து வழிப்பட்டனர்.. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்..
Next Story



