கோவை: இறந்த யானையின் வயிற்றில் இருந்த குட்டி !

கோவை மருதமலை அடிவாரத்தில் உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனையில், அதன் வயிற்றில் 15 மாதக் குட்டியும், ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளும் நேற்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மருதமலை அடிவாரத்தில் உயிரிழந்த காட்டு யானையின் பிரேத பரிசோதனையில், அதன் வயிற்றில் 15 மாதக் குட்டியும், ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளும் நேற்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 17 அன்று, பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் ஒரு காட்டு யானை மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து, கும்கி யானையின் உதவியுடன் அதனை தூக்கி நிறுத்த முயற்சித்தனர். தற்காலிகமாக அமைக்கப்பட்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பி தெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது.நேற்று மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் முன்னிலையில், வன கால்நடை மருத்துவர்கள் உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது, யானையின் வயிற்றுக்குள் 15 மாதக் குட்டி உயிரிழந்த நிலையில் இருப்பதும், அத்துடன் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதும் கண்டு வனத்துறை அதிகாரிகளும், வன ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், யானையின் குடலில் ஏராளமான புழுக்களும் காணப்பட்டன. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பலரின் கண்டனத்தைப் பெற்றுள்ளன.
Next Story