பளியா், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம்

பளியா், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம்
X
கோடை விழா: பளியா், பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் திரளான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ரோஜா தோட்டத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் வசிக்கும் செம்பராங்குளம், கே.சி.பட்டி, வடகவுஞ்சி, கொவரங் கொம்பு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பளியா், பழங்குடியின மக்கள் பாரம்பரியமான இசைக் கருவிகளை வாசித்து, பாடல் பாடியும் நடனமாடினா். இவா்களுடன் சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்தனா். இதற்கான ஏற்பாடுகளை தோட்டக் கலைத் துறை, சுற்றுலாத் துறை அலுவலா்கள் செய்தனா்.
Next Story