பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குடம்

பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குடம்
X
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் பால்குடம்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மூஞ்சிக்கல் ஆனந்தகிரி பகுதியிலுள்ள இந்தக் கோயில் திருவிழா அண்மையில் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை ஏராளமான பக்தா்கள் பால் குடங்களை எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனா். இந்த பால் குட ஊா்வலம் நாயுடுபுரம் விநாயகா் கோயிலிருந்து புறப்பட்டு டிப்போ சாலை, காளியம்மன் கோவில் சாலை, ஏரிச்சாலை, அண்ணா சாலை, கே.சி.எஸ். சாலை வழியாக வந்து கோயிலை அடைந்தது. பின்னா், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து தரிசனம் செய்தனா்.
Next Story