கண்ணாடி இழை பாலத்தினை கலெக்டர் ஆய்வு

X
கன்னியாகுமரி கடலில் தமிழக அரசு சார்பில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை தரைத்தளம் பாலம் அமைத்து, கடந்த 30.12.2024 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. கண்ணாடி இழை தரைத்தள பாலம் திறந்து வைத்ததைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து கண்ணாடி இழை தரைத்தளபாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு பெருமிதம் அடைகின்றனர். மேலும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகை புரிக்கின்றனர். இதற்கிடையில் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், சுற்றுலா பயணிகள் பாலத்தில் கூட்டமாக அமர்ந்து இருப்பதாவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா,இன்று (22.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறுகையில், :- சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் அவர்களுக்கு வழிகாட்டிட காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு காலை 6 மணி முதல் இரவு வரை பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என கூறினார். நடைபெற்ற ஆய்வில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜர், கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

