கோவை: காட்டுப்பன்றி அட்டகாசம்-மக்காச்சோளப் பயிர்கள் நாசம்

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அக்கநாயக்கன்பாளையத்தில் காட்டுப்பன்றிகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த அக்கநாயக்கன்பாளையத்தில் காட்டுப்பன்றிகளின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு, 10-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் சரஸ்வதி அம்மாள் என்பவரது தோட்டத்தில் புகுந்து, சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 50,000 ரூபாய் மதிப்பிலான மக்காச்சோளப் பயிர்களை நாசப்படுத்தின. சுல்தான்பேட்டை வேளாண்மைத் துறை மற்றும் மதுக்கரை வனத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். காட்டுப்பன்றிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் இன்று கூறுகையில், காட்டுப்பன்றி தொல்லையிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்காலிகத் தீர்வுகள் பயனளிக்காது என்றும் வலியுறுத்தினர். மேலும், ஆறுமுகம் என்ற விவசாயி, இரவு நேரங்களில் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளதால், பன்றிகளைச் சுடுவதற்கு அரசு துப்பாக்கிகளை வழங்கினால் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார். காட்டுப்பன்றிகளின் அச்சுறுத்தலால் விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், நிரந்தரத் தீர்வுகள் மூலம் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story