தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு!

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு!
X
தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பரிதாப உயிரிழந்தார்
தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி முத்தையாபுரம் எம்.சவேரியார்புரம், ஸ்ரீகணேஷ் நகரைச் சேர்ந்தவர் சைமன் மகன் கணேசன் (34). இவர் முத்தையாபுரத்தில் உள்ள கேஸ் கம்பெனியில் குட்டியானை டிரைவரைக வேலை பார்த்து வந்தார். கடந்த 19ம் தேதி மதியம் திருச்செந்தூர் - தூத்துக்குடி மெயின் ரோட்டில் அத்திமரப்பட்டி விலக்கில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற கார் திடீரென எவ்வித சிக்னலும் இல்லாமல் பிரேக் போட்டு நிறுத்தியதால், கணேசன் ஓட்டிச் சென்ற பைக் காரின் பின்பக்கம் மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் காரை ஓட்டிவந்த விருதுநகரைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மீது முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story