பீரோவிலிருந்த பணம் திருட்டு

X
மதுரையில் வீட்டின் கதவுகளை உடைத்து ரூ.1.87 லட்சம் திருடு போனது குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை, அவனியாபுரம் கணக்கு பிள்ளை தெருவைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (72). இவரது இரு மகன்களும் திருமணம் முடித்து தனியாக சென்றனர். இதனால் பஞ்சவர்ணம் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் சிசிச்சை கட்டணத்திற்காக வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்து வரும்படி அவரது மகன் செந்திலிடம் கூறியுள்ளார்.இதையடுத்து அவர் சென்று பார்த்தபோது வீட்டின் கதவு மற்றும் மர பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்தி 87 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story

