வடசேரி குளத்தில் வாலிபர் சடலம்

X
குமரி மாவட்டம் தக்கலை கீழ கல்குறிச்சி வடக்கு விளை பகுதியை சேர்ந்தவர் சதாசிவன் (19). வடசேரி பகுதியில் உள்ள ஒரு ஆக்கர் கடையில் வேலை பார்த்து வந்தார். இன்று காலை வடசேரி காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள நீராவி குளத்தில் குளிப்பதற்காக உள்ளே இறங்கியுள்ளார். ஆனால் அவர் கரைக்கு வரவில்லை. அதைத்தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் வடசேரி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். வடசேரி போலீசார், மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தேடினர். தேடுதலுக்கு பிறகு சதாசிவன் உடல் மீட்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

