கல்லூரி மாணவன் மாயம்.

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள புது சுக்காம்பட்டியைச் சேர்ந்த பொன்கிளியன் மகன் சந்தோஷ் (19) என்பவர் மேலூர் அரசு கலைக் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தாய் செல்வி மேலூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவனை தேடி வருகின்றனர்.
Next Story

