திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முதலில் மக்கா சோளம் அறுவடை
கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற மக்காச்சோளம் அறுவடை வயல் விழாவில் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்: மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோளம் பயிரை கூடுதல் பரப்பளவில் பயிரிட ஆட்சியர் அறிவுரை
கும்முடிபூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரணி கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்ற மக்காச்சோளம் அறுவடை வயல் விழாவில் விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்: மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மக்காச்சோளம் பயிரை கூடுதல் பரப்பளவில் பயிரிட ஆட்சியர் அறிவுரை திருவள்ளூர் மாவட்டத்தில், நெற்பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, மா போன்ற தோட்டக்கலை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கால்நடை, கோழி தீவனம், மதிப்பூட்டப்பட்ட உணவு வகை, எத்தனால் போன்றவற்றுக்கு, மக்காச்சோளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக கும்மிடிப்பூண்டி வட்டம் காரணி கிராமத்தில் பயிரிடப்பட்டு நன்கு வளர்ந்த மக்காச்சோள பயிரினை அறுவடை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் பிரதாப் தொடங்கி வைத்தார் தமிழகத்தில் ஆண்டுக்கு, 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவையுள்ள நிலையில், தற்போது 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20 லட்சம் டன், ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது. கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை இணைந்து, மாவட்டத்தில் முதல்முறையாக முன்னோடி திட்டம் அடிப்படையில், மக்காச்சோளம் சாகுபடியை, கடந்த ஜனவரி, மாதம் அறிமுகப்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்முறையாக பரிசோதனை அடிப்படையில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி திட்டம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஐந்து ஒன்றியங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பெரியபாளையம் அருகே காரணி சுற்றுவட்டார பகுதிகளில், 50 ஏக்கர் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. தற்போது, மக்காச்சோளம் நன்றாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. இதன் காரணமாக, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் பயிரிட தயாராக உள்ளனர்.
Next Story








