ஜாமபந்தியில் பங்கேற்ற ஆட்சியர் முருகனை தரிசித்தர்

திருத்தணியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களில் வந்த மாணவ- மாணவி ஆகியோரை அழைத்து பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பிரதாப்......
திருத்தணியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களில் வந்த மாணவ- மாணவி ஆகியோரை அழைத்து பாராட்டி சான்றிதழ், கேடயம் வழங்கினார் மாவட்ட ஆட்சியர் பிரதாப்...... திருத்தணி -மே-21 திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையற்றார் இந்த நிகழ்வில் வட்டாட்சியர் மலர்விழி, திருத்தணி டி.எஸ்.பி கந்தன், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்சாரத்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் என அனைவரும் பங்கேற்றனர் இந்நிகழ்வில் பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, குடியிருப்பு பட்டா, வீட்டு மனை வேண்டி மனு, புதிய ரேஷன் கார்டு கேட்டு மனு, சாதி சான்றிதழ் கேட்டு மனு, போன்ற மனுக்களை மாவட்ட ஆட்சியர் பிரதாப் இவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுவாக வழங்கினார்கள் மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து விரைந்து கோரிக்கை வைத்த அனைவருக்கும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார் இந்நிகழ்வில் திருவள்ளூர் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அத்திமாஞ்சேரி பேட்டை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள்- மாணவன் மணிமாறன் 10-வகுப்பு பொதுத்தேர்வில் 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார் இரண்டாம் இடமாக 494 மதிப்பெண்கள் பெற்ற மாணவி செல்வா ஸ்ரீ ஆகியோர்களை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் மாணவர்களை பாராட்டி சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி பரிசு கேடயம் வழங்கினார், மாணவர் பெற்றோர்களையும் பாராட்டினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டி சால்வை அணிவித்தார் அரசு பள்ளி மாணவர்களை அரசு நிகழ்ச்சியில் அழைத்து மாணவர்களை ஆட்சியர் ஊக்கப்படுத்தி பாராட்டினார் இந்நிகழ்வில் தொடர்ந்து வருவாய் தீர்வாயத்தில் தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உடன் ஆலோசனைகளை மேற்கொண்டார் இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து திருக்கோயில் கொடிமரத்தில் சாத்தாங்கமாக தரையில் விழுந்து சாமி தரிசனம் செய்தார் மேலும் திருக்கோயில் சார்பில் ஆட்சியர் பிரதாப் அவருக்கு மலர், மாலை மற்றும் பிரசாதங்களை வழங்கினார்கள் :- இணை ஆணையர்/ செயல் அலுவலர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு இந்நிகழ்வில் திருக்கோயிலில், அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர்களுடன் குழு புகைப்படமும் மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கொண்டார்....
Next Story