ஆரணியில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் வீடு கேட்டு மாற்றுத்திறனாளி மனு.

ஆரணியில்  நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் வீடு கேட்டு மாற்றுத்திறனாளி மனு.
X
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் எஸ்.வி. உள்வட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களிடையே மாவட்ட வழங்கல் அலுவலர் மனுக்களை பெற்றார்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் எஸ்.வி. உள்வட்டத்தைச் சேர்ந்த கிராம மக்களிடையே மாவட்ட வழங்கல் அலுவலர் மனுக்களை பெற்றார். ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் எஸ்.வி.நகரம் உள்வட்டத்தைச் சேர்ந்த இராட்டிணமங்கலம், இரும்பேடு, எஸ்.வி.நகரம், ஆதனூர், வெள்ளேரி, மட்டதாரி, ராந்தம்கொரட்டூர், பனையூர், ஒகையூர், மாமண்டூர் கிராம கிராமங்களைச் சேர்ந்த பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனக்கு வசிக்க வீடு இல்லாததால் அரசு வீடு கேட்டு மனு கொடுத்தார். மேலும் மாமண்டூர் காட்டேரி சேர்ந்த பயனாளி 30 வருடமாக பட்டாக்கெட்டும் பட்டா வழங்கவில்லை என்று கூறி கோரிக்கை மனு கொடுத்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இதில் ஆரணி வட்டாட்சியர் கௌரி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் லாவண்யா முன்னிலை வகித்தார். இதில் பட்டா கேட்டும், பட்டா மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி உள்ளிட்ட 306 பேர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன் அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
Next Story