புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது

X
Komarapalayam King 24x7 |22 May 2025 8:52 PM ISTகுமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற இருவர் கைது செய்யப்பட்டனர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.எஸ்.ஐ. மாதேஸ்வரன் தலைமையில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். காட்டூர், காவேரி நகர் ஆகிய பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக அறிந்து, நேரில் சென்றனர். அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக்கொண்டிருந்த கிருஷ்ணன், 62, செந்தில்குமார், 40, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருள் பேக்கட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
